கெட்டபழக்கம் இல்லாத, கட்டப்பஞ்சாயத்து செய்யாத நல்ல வேட்பாளர் கஸ்ஸாலி - மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


கெட்டபழக்கம் இல்லாத, கட்டப்பஞ்சாயத்து செய்யாத நல்ல வேட்பாளரை பாட்டாளி மக்கள் கட்சி சேப்பாக்கம் தொகுதிக்கு வேட்பாளராக வழங்கியுள்ளதாக மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சென்னை சேப்பாக்கம் - திருவெல்லிக்கேணி தொகுதியின் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " பெருமைக்குரிய சேப்பாக்கம் - திருவெல்லிக்கேணி தொகுதியின் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை அவர்களை ஆதரித்து, நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் அதிமுக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், த.மா.கா நிர்வாகிகள், புரட்சி பாரதம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், வாக்காள பெருமக்களே, தொகுதிவாழ் மக்களே அனைவருக்கும் வணக்கம். 

இந்த தொகுதியின் வளர்ச்சி குறித்து கஸ்ஸாலி பல விஷயங்கள் பேசுவார். இந்த தொகுதி சிறுபான்மை மக்கள் அதிகளவு நிறைந்த பகுதி. சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக கஸ்ஸாலி பல பிரச்சனைகளை பேசியுள்ளார். இந்த தொகுதி மக்களின் பல பிரச்சனைகள் குறித்து கஸ்ஸாலி பல இடங்களில் பேசியுள்ளார். திமுக சார்பில் கலைஞர் 2 முறை வெற்றியடைந்தார். ஆனால், அவர் இந்த தொகுதிக்கு செய்தது என்ன?. 

சுத்தமான தெருக்கள் இல்லை, குடிநீர் வசதி இல்லை, அடிப்படை வசதி என்பது இல்லை. கலைஞர் இரண்டு முறை வெற்றியடைந்து என்னதான் செய்தார். பாமக சார்பில் தற்போது அருமையான, கெட்டபழக்கம் இல்லாத, கட்டப்பஞ்சாயத்து செய்யாத நல்ல வேட்பாளர் கஸ்ஸாலியை உங்களுக்கு தந்துள்ளோம். அவரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். மாற்றத்தை மக்கள் விருப்ப வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Election Campaign at Chennai Chepauk 15 March 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->