தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படவுள்ளது. அன்றே முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மாவட்ட வாரியாக பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது.

இன்று காலை கூட 12 க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission Announce DMDK Party Election Symbol


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->