#BREAKING : ஓ.பி.எஸ்-க்கு பதவிக்கு பிரச்னை வரும்போதெல்லாம் சசிகலாவை அழைத்துக்கொள்வார் - ஈ.பி.எஸ்.! - Seithipunal
Seithipunal


ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்?அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது. தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? என கூறியுள்ளார்.

மேலும், ஓபிஎஸ்க்கு பதவி வேண்டுமென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார். பதவிக்கு பிரச்னை வரும்போதெல்லாம் சசிகலாவை கையில் எடுத்துக்கொள்வார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS speech about OPS and Sasikala


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->