இமாசலப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்.. பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி.. காங்கிரஸ் முன்னிலை.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், இமாச்சலில் ஆட்சியமைப்பதற்கு 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், இதில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று கருத்து கணிப்பில் கூட சொல்ல முடியவில்லை.

இரு தரப்பினரும் தீவிர செயலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கான ஒரு முடிவு இன்று தெரிய வரும். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் என 2 மாநிலங்களிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குஜராத் முன்னிலை நிலவரம்;
மொத்த தொகுதி-182
பாஜக-102
காங்கிரஸ் -43
ஆம் ஆத்மி கட்சி -7

இமாச்சலப் பிரதேசம் முன்னிலை நிலவரம் ;
மொத்த தொகுதி -68
பாஜக-21
காங்கிரஸ் -23
ஆம் ஆத்மி கட்சி -0
மற்றவை-3


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal pardesh assembly election results


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->