இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட யாராலும் தடுக்க முடியாது - செல்வப் பெருந்தகை - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறார் நரேந்திர மோடி. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருக்கிறார்கள் என்று கூறியதை காங்கிரஸ் கட்சி உடன் திமுக கூட்டணியை முறிக்க தயாரா என்று பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார். அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துக்களை திரித்து பேசுவது மோடிக்கு கைவந்த கலை.

தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை இழிவு படுத்தியதை மீண்டும் மீண்டும் சொல்லி மோடி இழிவு படுத்துகிறார் இதற்காக தமிழக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அமெரிக்கா வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று சாதனை புரிந்தார். 2010ல் இந்தியா வந்த ஒபாமா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத்துகளை களைஎடுக்க வேண்டும் என்று கூறினார். ஒபாமா எதைக் கண்டு அச்சம் அடைந்தாரோ அது 10 ஆண்டுகள் கழித்து மோடியின் ஆட்சியின் மூலமாக நடைபெற்று வருகிறது.

பத்து ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது பாஜக. மக்களை பிளவுபடுத்தும் மோடியின் நோக்கத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன , ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி தடுத்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Alliance Rahul Gandhi prathamar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->