கலைஞருக்கு மெரினாவில் இடம்கொடுத்ததே பாமகதான்..அன்புமணி ஆவேசபேச்சு!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைந்து பத்து தொகுதிகளை பெற்றது பாமக.
பாமக தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில்,இன்று ஆற்காடு பேருந்து நிலையத்தில், அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர்  பாமகவை சேர்ந்த திரு.வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது  திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசுகையில்,

வழக்கறிஞர் பாலு தங்கம் போன்றவர் அவரை போல ஒரு வேட்பாளர் உங்களுக்கு கிடைத்தற்கு  நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இந்தியா முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடி தாய்மார்களின் தாலியை பாதுகாத்தவர் பாலு. ஆனால் பாலுவை எதிர்த்து போட்டியிடும் திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகன்  மது ஆலைகளை நடத்தி டாஸ்மார்க் மது சப்ளை செய்து மக்களை குடிகார மக்களாக மாற்றியவர்  ஜெகத்ரட்சகன் என்று சாடினார் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

 அதனை தொடர்ந்து பேசுகையில், முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுத்ததே பாமக தான். கலைஞர் அவர்களின் உடலை  மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் பெரிதும் போராடினார். அதற்காக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகை அருகில் உள்ள காமராஜர் மண்டபத்தில் ஒரு ஏக்கர் இடம் உள்ளது அங்கு கொண்டு வேண்டுமானால் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

 இதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்குக்கு பெரும் தடையாக அமைந்தது  அய்யா சொல்லி வழக்கறிஞர் பாலு  அவர்கள் சென்னை மெரினா கடற்கரை என்பது பொதுவானது. அங்கு யாரின் நினைவிடமும் இருக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்று திரு ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர் பாலுக்கு இரவு 11 மணி அளவில் தொடர்பு கொண்டார்

வழக்கறிஞர் பாலுவோ  இதற்கு அய்யாதான் பத்தி கூற வேண்டும் என்று கூறிவிட்டார். பின்னர் என்னிடம் விசயத்தில்  கூறி அய்யாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பாலு கூறினார். நான் உடனே இந்த விஷயத்தில் ஐயாவை கேட்க தேவையில்லை. சமூக நீதி கொள்கையில் ஈடுபாடு உடையவர்  கலைஞர். அவருக்கு இடம் கொடுப்பது தவறு இல்லை கேஸை வாபஸ் வாங்குங்கள் என்று கூறினேன். பாமக வழக்கை  வாபஸ் பெறவில்லை என்றால் கலைஞரின் நினைவிடம் மெரினாவில் அமைந்திருக்காது. கலைஞருக்கு இடம் கொடுத்ததே பாமக தான் அன்புமணி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is amazing that the artist was given a place in the Marina.


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->