#Breaking: நாங்க என்ன தக்காளி தொக்கா?.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


திமுகவிற்கு 13 தொகுதிகள் பாண்டிச்சேரியில் ஒதுக்கீடு செய்தது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளரை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை பலகட்டமாக நடைபெற்று இறுதியில் 25 தொகுதிக்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாண்டிச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து இறுதியாக திமுகவிற்கு 13 தொகுதியும், காங்கிரசுக்கு 15 தொகுதியும் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவின் நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பாண்டிச்சேரிக்கு வருகை தந்திருந்த நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுகவிற்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது எதற்காக?. நமக்கு ஏன் 15 இடங்கள் பெற்றுள்ளீர்கள்?. இது சரியானதா? என்று பரபரப்பாக கோஷமிட்டு முழக்கம் எழுப்பியதால் பாண்டிச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Congress Supporters Protest Against Dhinesh Gundurav due to Less Constituency Allocated


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->