விவசாயி எதனைதொட்டாலும் நன்மையே - தமிழக முதல்வர் திருவையாறில் உருக்கமான பேச்சு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியிடமும் கோதாவரி - காவேரி திட்டம் இணைப்பிற்கு நிதி உதவி கேட்டேன். அதையும் பிரதமர் மோடி வழங்குவதாக தெரிவித்தார் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், " வேளாண் பெருமக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டப்போராட்டம் நடத்தி, வேளாண் மக்களை பாதுகாத்து எனது தலைமையிலான அதிமுக அரசு. காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயி எதனைதொட்டாலும் அதன் மூலமாக நன்மையை அடைவோம்.

விவசாய பெருமக்களுக்கு உயிராய் இருப்பது நீர். எனது இலட்சியம் தமிழகம் நீர்மேலாண்மையில் இன்னும் சிறந்து விளங்க வேண்டும். தண்ணீருக்காக வரும் காலங்களில் கர்நாடகா மாநிலத்தை நம்பி இருக்கும் சூழ்நிலை மாற வேண்டும். 

ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வரிடம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, தமிழகத்திற்கு தேவையான உதவியை நாங்கள் செய்கிறோம் என்று கூறினார்கள். பிரதமர் மோடியிடமும் கோதாவரி - காவேரி திட்டம் இணைப்பிற்கு நிதி உதவி கேட்டேன். அதையும் பிரதமர் மோடி வழங்குவதாக தெரிவித்தார். 

குடிமராமத்து என்ற திட்டம் மூலமாக ஏரி, குளம், குட்டைகளை தூர்வாறி உள்ளோம். இதனால் வேளாண் பெருமக்கள் பயன்பெறுகிறார்கள். நிலத்தடி நீர் உயர்கிறது. மக்களும் பலன் பெற்றுள்ளார்கள். பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இன்னும் கட்டப்பட்டு வருகிறது. 

விவசாய பெருமக்களின் வாழ்விற்காக பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. நான் விவசாயி என்பதால் என்னை விவசாயி என்று தான் கூறுவேன். நான் விவசாயி என்று கூறுவது மு.க. ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. விவசாயிகளின் கஷ்டம் என்பது நன்றாக தெரியும். விவசாயிகளின் கஷ்டத்தை நானும் அனுபவித்துள்ளதால், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign Thanjavur Thiruvaiyaru TN Election 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->