நடிகை ரம்பா விவாகரத்து! கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மனு!

December 3, 2016 8:09 am
நடிகை ரம்பா விவாகரத்து! கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மனு!

சென்னை: நடிகை ரம்பா தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் சிறந்த கதாநாயகியாக வளம் வந்தவர்.

“உள்ளதை அள்ளித்தா” ,”அருணாச்சலம்”, ”நினைத்தேன் வந்தாய்” என பல ஹிட் படங்களில் நடித்த ரம்பா , கனடாவை சேர்ந்த தொழிலதிபரை மணம் முடித்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனக்கும் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மாதம் தோறும் 2.50 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக தனது கணவர் தர உத்தரவிடக் கோரி மற்றொரு மனு ஒன்றை ரம்பா தாக்கல் செய்திருந்தார்.

தான் தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும், எனவே தனக்கும் தனது 2 பெண் குழந்தைகளுக்குமான படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.2.50 லட்சம் ரூபாய் தனது கணவர் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் ரம்பா தன்னை கனவுரைதான் சேர்த்து வைக்கக்கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனால் இந்த புதிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 21 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media