ரெட் எஃப்எம் வழக்கு- மத்திய அரசுக்கு உத்சா நீதி மன்றம் நோட்ஸ்..!

November 28, 2016 11:41 am
ரெட் எஃப்எம் வழக்கு- மத்திய அரசுக்கு உத்சா நீதி மன்றம் நோட்ஸ்..!

சன்குழுமத்திற்கு சொந்தமான ரெட் எஃப்எம் நிறுவனம்‌, பண்பலை ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்க கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ் தாக்கூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணியம் சுவாமி சன்குழுமத்தின் ரெட் எஃப்எம் நிறுவனம், டெல்லி மற்றும் மும்பை வட்டங்களுக்கான 3ஆம் கட்ட பண்பலை ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சன் குழுமத்திற்கு தொடர்புடையதாக சொல்லப்படும் நிலையில், அந்த நிறுவனம் ஏலத்தில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சன்குழுமத்தின் ரெட் எஃப்எம் நிறுவனம் பண்பலை ஏலத்தில் பங்கேற்க பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ரெட் எஃப்எம் நிறுவனம் ஏலத்தில் பங்கேற்கலாம் என நிதி அமைச்சகமும், தலைமை வழக்கறிஞரும் அனுமதி அளித்தனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media