ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் பரிசு தொகை 5 கோடி..!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் பரிசு தொகை 5 கோடி..!!

பெங்களூரு : டோகியோ ஒலிம்பிக் போட்டியில் கர்நாடகா வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றால் அவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமைய்ய அறிவித்துள்ளார்.

கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் குவிந்தது. அதோடு தெலுங்கானா அரசு 5 கோடிக்கு காசோலை வழங்கி கெளரவித்தது.

இந்நிலையில் 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை கர்நாடகா வீரர் வென்று கொடுத்தால் அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமைய்ய அறிவித்துள்ளார்.

அதே போல வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடியும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதற்க்கு முன் கர்நாடகா வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று கொடுத்தால் 50 லட்சமும், வெள்ளி அல்லது வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு என அறிவித்திருந்தது. தற்போது திடீரென 10 மடங்கு அதிக தொகையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media