மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்த ரஷ்ய விமானம்!

December 19, 2016 7:22 am
மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்த ரஷ்ய விமானம்!

23 பயணிகளுடன் சென்ற IL-18 வகை ரஷ்ய ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் டிக்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில்
இந்த விபத்தில் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ புலனாய்வாளர்கள் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media