பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை – பீம் ஆப்..!

பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை – பீம் ஆப்..!

மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான பீம் (BHIM) மற்ற எல்லா செயலிகளையும்விட பாதுகாப்பனது என்று LUCIDEUS என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாகேத் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பீம் செயலியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், பணம் செலுத்துவதும், கணக்கில் தொகை இருப்பின் அதன் அளவைக் காண்பதும் என இரண்டு செயல்பாடுகளே உள்ளன. கூகுள் வாலெட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் PAY செயலியில் இருக்கும் அதே வகை குறியாக்கத்தை கொண்டே இந்த செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்த செயலியை பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களின் மொபைல் எண் மற்றும் ஐ.டி-யை தானாகவே பதிவு செய்துகொள்ளும். இதன்மூலம் குறிப்பிட்ட நபரின் கணக்கை வேறொரு மொபைல் மூலம் இயக்க இயலாது. மேலும் சிம் கார்டு இல்லாத மொபைல் மூலமும் இந்த பீம் செயலி செயல்படும். பயனாளரால் பதிவு செய்யப்பட்ட UPI PIN எண், ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் கேட்கப்படும். எனவே இ-வாலெட் பரிவர்த்தனை என்பது நேரடி பரிவர்த்தனையைவிட நேரம் குறைவானது’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media