அதகளம். அட்டகாசம். கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்குமிடையே ஊசலாடும் என சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவிய ”சைத்தான்”

அதகளம். அட்டகாசம். கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்குமிடையே ஊசலாடும் என சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவிய ”சைத்தான்”

‘சைத்தான் திரைப்படத்துக்கு கதை எழுதியது யார்?’ என்ற கேள்வி தான் படம் முடிந்ததும் முதலில் கேட்கப்பட்டது. இதுதான், படம் தொடங்குவதற்கு முன்பு தியேட்டரில் ஸ்கிரீனை கவனிக்க வேண்டும் என்பது. யார் எழுதியிருக்கிறார்கள்? என்று தேடினால், சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது; ஸ்டீக் லார்சனின் The Girl with the Dragon Tattoo கதையைப் போலவே இருக்கிறதென்றெல்லாம் பேசப்படுகிறதே தவிர, 2016ஆம் ஆண்டில் மூன்று இளைஞர்கள் என்றோ எழுதப்பட்ட கதைகளைத் தழுவி சிறப்பானதொரு திரைக்கதையுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார்களென்று காண்பதற்கு அரிதாகக் கிடக்கிறது.

saithan-1

பலவிதமான மனக்குழப்பங்களுடன் மருத்துவரைச் சந்திக்கும் ஒரு நோயாளியாக அந்த சில மணி நேரங்கள் தொடங்குகிறது. படத்தின் முதல் 10 நிமிடக்காட்சியை இதுவரை இல்லாத முறையில் விஜய் ஆண்டனி ரிலீஸ் செய்ததற்குக் காரணம், அந்தக்காட்சி கதைக்கானது அல்ல. ரசிகர்களுக்கானது. ஒரு சீட்டில் உட்கார வைக்கப்படுகிறீர்கள். கண்களை மூடி மூடித் திறக்கிறீர்கள். அவ்வப்போது இருள் நிறைந்த காட்சிகளென வந்து முதல் பத்து நிமிடத்துக்குள் ஒருவிதத் தூக்கத்துக்குக் கொண்டு சென்று திடீரென ரயிலை விட்டு இடிக்கவைக்கும்போது உறக்கமும் கலைகிறது. அதுவரை மனதில் இருந்த விஷயங்களும் மறந்து போகிறது. எனவே படத்தை திறந்த மனதுடன் எதிர்பார்ப்புகளை மறந்து பார்க்கிறோம். இது ஒரு டிரீட்மெண்ட்.

படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளில் ஷாப்பிங் மால்களும், கேம்ஸ் வோர்ல்டும் வைக்கப்பட்டதெல்லாம், இப்படி நல்ல மனநிலையில் படம் பார்க்க வர வேண்டும் என்பதால்தான். வெளியுலகத்தில் இந்த விஷயம் தவறிப்போவதால், படத்திலேயே அதற்கான மருந்தை வைத்து விடுகிறார்கள். உறக்கத்திலிருந்து விடுபட்டதும், ஜெயலட்சுமி என்ற கேரக்டரைத் தேடிச் செல்கிறார் தினேஷ். யார் அந்த ஜெயலட்சுமி? என்பதுதான் கதை என அசட்டுத்தனமாக சொன்னால் படம் பார்த்து தான் விமர்சனம் எழுதினார்களா? என்ற சந்தேகம் வரும். ஆனால், கதையே இதுதான் எனும்போது எப்படி சொல்ல முடியும்?

arundhadhi

விஜய் ஆண்டனி அதகளம். அட்டகாசம். கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்குமிடையே ஊசலாடும் அந்த இரு கண்களும் சரி, தீர்க்கமாக அவர் செய்யும் அனைத்துக்கும் நம்மை ஒப்புக்கொள்ள வைக்கிறது. நவம்பர் மாதத்தின் மூன்றாவது மாதத்தில் ரிலீஸாக வேண்டிய இந்த படம், பிரதமரின் கருப்புப் பண ஒழிப்பால் தள்ளிப்போகிறது. அதேசமயம், பிச்சைக்காரன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் அல்லாத மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைக்கிறது.

இதுதான் ‘சைத்தான்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சரியான தருணம். அதேசமயம், பணம் இல்லாமல் மக்கள் படத்தைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற மிகவும் சுவாரஸ்யமான சில இரவுகளை எப்படி விஜய் ஆண்டனி கடந்திருப்பாரோ, அதே போன்றதொரு சுவாரஸ்யத்துடன் சைத்தான் திரைப்படத்தின் திரைக்கதையும் நகர்கிறது.

சுஜாதாவின் மிகச்சிறந்த புத்தகத்திலிருந்து சில விஷயங்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்காகவே ஒரு படம் நன்றாக இருந்துவிட முடியாது. எவற்றையெல்லாம் எடுக்கிறோம். அந்தக் கதாபாத்திரத்தை லாவகமாகப் பயன்படுத்த நம்மால் முடியுமா? அந்த கேரக்டருக்கான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் ஊடகமாக இருக்க கலைஞன் கிடைப்பானா? என்ற கேள்விகளுக்கெல்லாம் கிடைக்கும் பதில் தான் வெற்றி தேடித்தருமே தவிர, சுஜாதா கதை என்பதாலேயே படம் வெற்றி பெற்று விடுவதில்லை.

saithan-2

கதாபாத்திரத் தேர்வுகளை அத்தனை சுவாரஸ்யமாகவும், தேவையானதாகவும் வைத்திருக்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஜோடி குரூஸ், கார்த்திக் கிருஷ்ணா ஆகியோர் படம் பார்க்கக் கொடுத்தப் பணத்துக்கான திருப்தியை நமக்குக் கொடுத்து விடுகின்றனர். தமிழ் சினிமா இப்போது தான் திகில் படங்களைக் கொஞ்சமாக மறந்து வந்தது. அதற்குள் இப்படி ஒரு திகிலான, சுவாரஸ்யமான, மர்மங்களுடன் ஒரு படத்தைக் கொடுத்து உறங்கிக்கொண்டிருந்த ஆன்மாக்களை கிளப்பிவிட்டு விட்டார்கள். இப்படி மாதத்துக்கு ஒரு சிறந்த திகில் திரைப்படம் ரிலீஸாகும் வரை சாத்தான்களையும், தமிழ் சினிமாவையும் விட முடியாது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media