யாரைகோட்டு நான் முதல்வர் ஆகணும்னு உன் லெட்டர் பேடில் அறிக்கை விட்ட? நான் சொன்னேனா? தம்பியை வறுத்தெடுத்த சசி!

January 11, 2017 10:51 am
யாரைகோட்டு நான் முதல்வர் ஆகணும்னு உன்  லெட்டர் பேடில் அறிக்கை விட்ட? நான் சொன்னேனா? தம்பியை வறுத்தெடுத்த சசி!

கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து இன்று வரை சித்தி, சித்தப்பு, அண்ணி, அத்தை, அத்தாச்சி, போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறாதாம்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுக எனவும் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் ஆன சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், மன்னார்குடி மாஃபியா கும்பலின் லீடரான சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் மன்னார்குடியிலிருந்து பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.

இதுமட்டுமல்ல, சின்னம்மா புராணம் பாடும் பஜனை கோஷ்டியில் உறுப்பினர்களான நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்… அமைச்சர்கள் மறுபுறம்… சின்னம்மா சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்கள்.

இவர்களின் இந்த கோமாளித்தனமான பேச்சுக்கும், செயலுக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை. முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினாராம் சசி. ‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா? ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா? யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா?’ என்று சத்தம் போட… தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்தார்களாம்.

முதல்வர் அவதாரம்

வரும் 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம். ”மன்னார்குடியில் அடுத்த மாஸ்டர் பிளான் விரைவில் கைகூடிடும் போல”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media