VideoShow அப்ளிக்கேசன்

VideoShow அப்ளிக்கேசன்

அனைவரும் போட்டோக்களை எடுத்து, அதனை எடிட் செய்து வாட்ஸ்ஆப் ,பேஸ்புக் என சமூக வலைதளங்களில் பதிவுசெய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், அதே சமூக வலைதளத்தில் எடிட் செய்த வீடியோ ஒன்றினை நாம் காணும, உருவாகும் சிந்தனை ஒன்று மட்டும் தான். இந்த வேலையை செய்ய நமக்கு கணினி ஒன்று வேண்டும் என்பதுதான் அந்த சிந்தனை.

ஆனால், டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்டகாலத்தில் நமக்கு அந்த எண்ணமே தேவையில்லை. நமது மொபைல் மூலமே அந்த எடிட்டிங்கை செய்ய முடியும். இதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப் தான் இந்த VideoShow. இதனைப் பயன்படுத்தி நாம் பல்வேறு விதமான எடிட்களை செய்யலாம். ஒரு வீடியோவின் கலர் மாற்றுதல், பின்னணியில் நமது சொந்த வாய்ஸ் சேர்த்தல், ஏதேனும் ஒரு பகுதியினை zoom செய்து காட்டுதல் போன்ற பல்வேறு விதமான எடிட்டிங்கை நாம் பயன்படுத்தலாம். இந்த ஆப் பல்வேறு நாடுகளிலும் நல்ல வரவேற்பினை பற்றுள்ளது. இதில் எடிட் செய்த வீடியோவை நாம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். நாமும் இனி ஒரு எடிட்டிங் வல்லுனராக மாறலாம்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media