யுவனின் வெறித்தனமான பி.ஜி.எம் – செம போத ஆகாத..!

December 10, 2016 7:02 am
யுவனின் வெறித்தனமான பி.ஜி.எம் – செம போத ஆகாத..!

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ திரைப்படம், தமிழ் திரையுலகுக்கு அதர்வா எனும் நடிகனை மட்டும் அல்ல; அந்த திரைப்படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷையும் அறிமுகம் செய்தது. முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அந்த படத்தின் வெற்றி இருந்தது.

அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் அதர்வா தனது நடிப்பினை வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக ‘பரதேசி’ படத்தின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதன்பின் இப்போது மீண்டும் தன் அறிமுக இயக்குநர் பத்ரியுடன் சேர்ந்து ‘செம போத ஆகாத’ என்ற படத்தில் இணைந்துள்ளார். அது ஒரு வெற்றி கூட்டணி என்றாலும் பானா காத்தாடியின் முக்கிய வெற்றி, அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இசையமைப்பாளர் யுவன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இப்போது இந்த மூவரின் கூட்டணியில் மீண்டும் இயக்கிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மொத்தம் 56 நொடிகள் மட்டும் உள்ள டீசர் முழுவதும் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. யுவனின் பின்னணி இசையில் செய்திருக்கும் பிரம்மாண்டம் தான் அதகளம்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media