லைஃப்ல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமா? ‘அச்சம் என்பது மடமையடா’

November 11, 2016 10:30 am
லைஃப்ல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமா? ‘அச்சம் என்பது மடமையடா’

ஜாலியாகா சுற்றித்திரியும் இளைஞன்னுக்கு ஒரு சம்பவம் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. ‘லைப்ல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி’ என்ற இந்த லைன் தான் மொத்த படமே.

அச்சம் என்பது மடமையடா; படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறார் சிம்பு. இவரது தங்கையின் தோழியாக மஞ்சிமா மோகன் வருகிறார். பார்த்தவுடன் சிம்புவிற்கு பிடித்துபோகிறது. படிப்பிற்காக மஞ்சிமா, சிம்பு வீட்டில் தங்குகிறார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காதால் வளர்கிறது. ஒரு கட்டத்தில் சிம்புவும், மஞ்சிமா மோகனும் ஒரு பைக் ட்ரிப் செல்கின்றனர். பைக் ட்ரிப் போகும்போது அங்கு ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்திற்கு பிறகு ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. இதை தொடர்ந்து அது விபத்தா அல்லது கொலை முயற்சியா ?. சிம்பு & மஞ்சிமா நிலைமை என்ன ? இவர்கள் காதல் என்ன ஆனது என்பது மீதி கதை.

simbu-1

படத்தின் மிகப்பெரிய பலமே சிம்பு தான். அவர் பேசும் வசனங்கள், முகபாவனைகள் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார் கெளதம் மேனன்.

manjima-mohan

படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்.ஆனால், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது.

சிம்பு மற்றும் மஞ்சிமா மோகனுக்கு இடையில் நடக்கும் காதல் காட்சிகள். ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் பாதியில் காதல், இரண்டாம் பாதியில் விறுவிறு காட்சிகள் என திரைக்கதை அமைத்திருக்கும் விதம் நன்று. கெளதம் மேனன் முயற்சித்த கமர்சியல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media