ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் வரை அரங்கேறும் மன்னார்குடி மஃபியா நாடகங்கள்!

January 8, 2017 6:37 am
ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் வரை அரங்கேறும் மன்னார்குடி மஃபியா நாடகங்கள்!

சசிகலா… நடை உடை பாவனைகளை மாற்றி வருகிறார்.. நிறைய விமர்சனங்கள், வருகிறது வேலைக்காரிக்கு வந்த வாழ்வை பார்யா.. என்றெல்லாம் சில பெண்கள் சாலையோர பேருந்திற்காக நின்றிருந்திருந்த போது பேசுவதை கேட்க முடிகிறது.

திருமதி சசிகலா வேலைக்காரியாக இருந்ததால் வரகூடாது என்ற கேள்வியை ஏற்க முடியாது. ஆனால் திறமையும் தகுதியும் உள்ளவரா? என பார்க்கவேண்டுமே தவிர அவர் எந்த தொழிலை செய்தால் என்ன.
ஏன் கலைஞரே தன் சாரதியை புதுச்சேரி முதல்வராக்கி அழகுபார்த்தவர்தான்.

ஆனால், நயவஞ்சகத்தால் உயரவர துடிக்கிறார். என்பதுதான் இங்கே பிழையாய் நிற்கிறது. பணத்தை மட்டுமே முதலீடு செய்து தமிழகத்தில் அதிகாரத்தை பெற்றுவிட முடியுமென்பதற்கு சமீபகால நிகழ்வுகள் போதும். இதில் ஜெயலலிதா சசிகலா கும்பலே மிகப்பெரிய சாட்சியம் வகிக்கிறார்கள். இதற்கு முன்பு வாக்கிற்கு பணம் கொடுக்கபடவே இல்லையா என்ற கேள்வி எழும் மறுப்பதற்கில்லை
60 களில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஜமீன்கள் நிலகிழார்கள். ஏழைகளை குறிவைத்து பணவிநியோகம் செய்திருக்கிறார்கள் திராவிட இயக்கம் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு அது அதிகளவில் வழங்கப்பட்டது. ஆனால், சில முக்கியமான காலகட்டங்களில் பணத்திற்கு வழங்கி நிற்காமல் ஆட்சியாளர்களை, அரசியல் கட்சிகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது தொகை அதிகமாகிற போது மனம் சஞ்சலபட்டு வழங்கி நிற்கிற கொடுமையை காண முடிகிறது. இந்த ஈனசெயல் சசிகலா வகையறா போன்ற மாபியா கும்பல்களுக்கு எதையும் செய்துவிட முடியுமென்கிற துணிச்சலை தருகிறது. வைகோ போன்ற நாணயமற்ற அரசியல்வாதிகளை பணத்திற்காக எதையும் செய்யவைக்கிறது.

சில்லரை கட்சிகளை வழக்கம் போல் பணத்தை எதிர்பார்த்து நிற்கிறவரை சசிகலா போன்ற பினாமி குயின்கள் தூக்கி பிடிக்கபடுவார்கள். ஊடகங்கள் பணத்திற்காக தம்பிடித்து தூக்கிவைத்து ஆடுகிற அவலம் தொடரத்தான் செய்யும். மக்களின் மௌனம் இவர்களை பேயாட்டம் ஆடசெய்யும். இவர்கள் மீதான கோவத்தை மக்கள் வெளிப்படுத்துகிறவரை.
ஆடத்தான் செய்வார்கள். நிறைய அரிதாரம் பூசி வகைவகையாய் போஸ் கொடுப்பார்கள். தகுதியில்லாதவர்கள் புகழ்மாலை பாடினால் பதவி தருவார்கள் இவையாவும்,ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் வரை நாடகங்கள் அரங்கேறும்.

”நாடகம் முடியும் போது தெரியும், நாடகத்தின் ராஜபார்ட் என்று”

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media