தொடரும் விவசாயிகள் தற்கொலையும், எம்.சி.சம்பத்தின் கொச்சை பேச்சும்!

January 8, 2017 11:27 am
தொடரும் விவசாயிகள் தற்கொலையும், எம்.சி.சம்பத்தின் கொச்சை பேச்சும்!

தமிழகம் வறட்சியின் பிடியில் தண்ணீரின்றி. தண்ணீரை பெற்று தந்துவிடும் என நம்பி நட்டவர்கள் இந்த அதிமுக அரசின் கையாலாகாத செயலால் நொந்து புலம்பி மழையாவது பெய்யும் போட்ட முதலையாவது எடுத்துவிடலாமென்றிருந்த நிலையில் மழையும் பொய்த்துப்போய் வாங்கிய கடனை கட்டமுடியாமல் திக்கற்று மரணத்தை தேடுகிறான் அரசியல் கைக்கூலிகளை நம்பி ஏமார்ந்த உலகத்துக்கே பசியை போக்கியவன்.

பாவம் தோன்றவில்லை அமைச்சருக்கு. இனியேனும் தற்கொலை செய்துக்கொள்ளாதீர்களென ஆறுதலாய் சிலவார்த்தை பேசவில்லை மாறாக விவசாயிகளை நோயால் போனான் வயது முதிர்வால் போய் சேர்ந்தான் என கொச்சைபடுத்தியிருக்கிறார்.

ஊடகங்கள் குறிப்பாக ‘புதியதலைமுறை’, ‘தந்தி‘ போன்ற அதிமுக ஆதரவு ஊடகங்கள் கூட விவசாயிகள் தற்கொலையை கவர்ஸ்டோரி செய்து செய்தி வெளியிட்டும் அமைச்சர் மமதையில் /திமிரில் பேசிவிட்டு போகிறார். தினம் தினம் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறதே என்ன சொல்ல போகிறார் அமைச்சர்? தண்ணீர் தர மறுத்த கர்நாடகம் கூட வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு நிதிஉதவி பெற்றுவிட்டது. கர்நாடக நீரை நம்பி விவசாயம் செய்து வாடிய பயிரைக்கண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை வந்தபிறகும் அரசு மூடிமறைக்கிறது. உண்மையை எடுத்துச்சொல்லி நிதியுதவி பெற என்ன தயக்கம்.

இவர்களின் நிர்வாக லட்சணம் வெளியே தெரிந்துவிடுமென்ற பயமா.  இதுபோன்ற மிக மோசமாக செயல்படும் அரசு இந்தியாவிலே எங்கும் கண்டதில்லை.

நோய்வந்து போனான் என இவர் சொல்லும் போதே இவரின் திமிர் தெரிகிறது.. காசு ஓட்டு போட்டவனை இந்தளவிற்கு மதித்தால் போதுமென்று எண்ணுகிறாரோ என்னவோ.. தஞ்சை நாகை மாவட்டங்களில் பயிர் வளராமல் நிற்பதை நேரில் காணமுடிகிறது நிலத்தடி நீரை நம்பி நட்டவர்கள் கூட தவிக்கிறார்கள். சிறிது மழை பெய்திருந்தாலாவது மெச்சப்பட்டிருக்கலாம். விவசாய கடனையாவது தள்ளுபடி செய்யலாம்.

எம்.சி.சம்பத் போன்றவர்களை இந்த மக்கள் புறக்கணிக்கவேண்டும். தமிழகஅரசு விரைந்து விவசாயிகள் தற்கொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பத்தை அமைச்சர் பதவியிலிருந்து தமிழக முதல்வர் நீக்கி உத்தரவிடவேண்டும். மக்களுக்காக தான் அமைச்சர். அமைச்சரின் கூற்று ஒட்டுமொத்த விவசாயிகளை அவமதிப்பதாக இருக்கிறது.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares