ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி :  தமிழக வீராங்கனை சர்வாணிகா 6 தங்கம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை சர்வாணிகா 6 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

16-வது ஆசிய பள்ளிகளுக்கு இடையேயான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையின் வாஸ்கதுவாவில் நடைபெற்று நடந்தது. இதில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை சர்வாணிகா கலந்து கொண்டார்.

இதில், பிளிட்ஸ் போட்டிகளில் தலா 7 சுற்றிகளிலும் அவர் வெற்றி பெற்றார். ஸ்டாண்டர்டு பிரிவில் விளையாடிய அனைத்து சுற்றுகளிலும் அவரே வெற்றி பெற்றார். 

3 தனிநபர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய அவர் அணிகள் பிரிவையும் சேர்த்து மொத்தம் 6 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia chess championship competition sharvanika won 6 gold medals


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->