தந்தையானார் பிரபல கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால்.!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருப்பவர் தான் மயங்க் அகர்வால் கடந்த 2018 ஜூன் மாதத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், மனைவி கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து மயங்க் அகர்வால் மற்றும் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மயங்க் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், "எங்களது மகன் அயன்ஷ்-ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்." என்று தெரிவித்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayank aggrawall has Child


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->