ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் - இஷான் கிஷான் களமிறங்கினர். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - விராட் கோலி ஜோடி வங்கதேச பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். இதில், 84 பந்துகளில் சதத்தை பதிவு செய்த இஷான் கிஷான் அதன்பிறகு ருத்ரதாண்டம் ஆடினார். இதன் மூலம் 129    பந்துகளில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்து டஷ்கின் அகமது பந்துவீச்சில் அவுட்டானார்.

அதன் பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் 72வது சதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை குவித்துள்ளது.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 71 சதம் அடித்து இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தி, இந்திய வீரர் விராட் கோலி 72  சதமடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்;

சச்சின் டெண்டுல்கர் - 100 சதங்கள் (782 இன்னிங்ஸ்)

விராட் கோலி - 72 சதங்கள் (536 இன்னிங்ஸ்)

ரிக்கி பாண்டிங் - 71 சதங்கள் (668 இன்னிங்ஸ்)

குமார் சங்கக்காரா - 63 சதங்கள் (666 இன்னிங்ஸ்)

ஜாக் காலிஸ் - 61 சதங்கள் (617 இன்னிங்ஸ்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli beat Ricky ponting most international centuries


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->