”சசிகலாவை தொண்டர்கள் யாரும் விமர்சனம் செய்யவேண்டாம்”; ஸ்டாலின் வேண்டுகோள்!

December 29, 2016 1:10 pm
”சசிகலாவை தொண்டர்கள்  யாரும் விமர்சனம் செய்யவேண்டாம்”; ஸ்டாலின் வேண்டுகோள்!

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது.’ இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்’ என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த அவசர பொதுக்குழு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் கேட்டு நேற்று சசிகலா புஷ்பாவின் கணவர் தலைமைக்கழகம் சென்றிருந்தார்.அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை வெளியேற்றிவிட்டனர். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். அதன்படி அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியான நேரத்தில், தி.மு.க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசினார் அறிவாலய நிர்வாகி ஒருவர். அவர்களிடம், ” அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுகூடி தலைமைப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்துள்ளனர். இது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். உடனே, ‘இவர் எல்லாம் பொதுச் செயலாளர் ஆகலாமா’ என பொதுவெளியில் யாரும் பேசிக் கொள்ள வேண்டாம்.

இணையத்தளத்தில் கருத்துப் படங்கள் பதிவிடும்போதும் அவரைத் தாக்கும்விதமாக எதையும் செய்ய வேண்டாம். பதிலுக்கு அவர்கள் தரப்பில் இருந்து எதிர்வினைகள் கிளம்பினால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.ஜனவரி 4 ல் திமுக பொதுக்குழு கூடுகிறது.அந்த கூட்டத்தில் ஸ்டாலினுக்கு புதிய பதவி காத்திருக்கிறது.இந்த நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து கருது வெளியிட்டால் அது பல எதிர்வினைகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தவிர, தற்போதைய அரசியல் களத்தில் ஸ்டாலினுக்கு நேரடியான அரசியல் போட்டி என்று சொல்வதற்கு யாரும் இல்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசியே அரசியல் செய்து வந்தார் கலைஞர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். அவர்கள் இருவருக்கும் இருந்த வாக்கு வங்கி, எங்கள் பக்கம் திரும்பியதில்லை. அப்போலோ மருத்துவமனையில் நடந்தது பற்றி நங்கள் எதுவும் கேட்கவில்லை, நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. என்ன பதில் சொல்லப் போகிறார்கள் மன்னார்குடிக்காரர்கள்’ எனப் பிரசாரம் செய்வோம்.சசிகலாவின் வருகையை அ.தி.மு.கவின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களிடம் மன்னார்குடி உறவுகளின் செயல்பாடுகளை முன்வைத்தாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. எனவே, எங்களுக்கான வேலையை அ.தி.மு.க நிர்வாகிகள் எளிதாக்கிவிட்டார்கள். ‘ தேர்தல் காலங்களில் பார்த்துக் கொள்வோம். அதுவரையில் அமைதியாக இருப்போம்’ என நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்” என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிப்பதுதான், தி.மு.கவுக்கு நல்லது’ என்ற கருத்து உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ” இதுவரையில், சசிகலா எப்படிப் பேசுவார் என்பதுகூட அ.தி.மு.க தொண்டர்களுக்குத் தெரியாது.

ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர் சசிகலா. எனவே அவருக்கு அரசியல் அனுபவம் நிறையவே உள்ளது. அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார் அதிமுக நிர்வாகி ஒருவர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media