செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

ஸ்டாலின் என்கிற “தமிழ்நாட்டு ராகுல்காந்தி”! – பா.ம.க சூரிய பிரகாஷ்

January 10, 2017 8:49 am
ஸ்டாலின் என்கிற “தமிழ்நாட்டு ராகுல்காந்தி”! – பா.ம.க சூரிய பிரகாஷ்

தன்னை விட இருபது வயது இளையவர்கள் கூட “முதல்வர் வேட்பாளராகி” தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்குகிற நேரத்தில், முன்னாள் துணை முதல்வராக இருந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளர் கூட ஆக முடியாத திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் இப்போது தான் தவமாய் தவமிருந்து “செயல் தலைவர்” என்ற புதிதாக உண்டாக்கப்பட்ட பதவி (கலைஞர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ) கிடைக்க பெற்றார்.

பதவியில் அமர்ந்ததும் ஏதாவது அதிரடி நாடகம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட துடித்தார். ஊடகத்தையும் ஏற்கனவே வளைத்தாகிவிட்டது. இந்த வேசி ஊடகதாரிகளும் “அந்த பேமன்ட் போன மாசம். இது இந்த மாசம்” என்று மாதம்தோறும் முந்தானையை நீட்டுவார்களே. ஜெயா டிவி உட்பட அனைத்து ஊடகங்களுக்கும் கோடிக்கணக்கில் காசு கொடுத்து அழுதவர்கள், கொடுத்த காசுக்கு ஏதாவது வேலை வாங்க தவிப்பது நியாயம் தான்.

கதையில் அங்கே தான் டுவிஸ்ட் வந்தது. இந்த பதட்டத்தில் இருந்த திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மக்களை கவரும் யோசனை சொல்கிறேன் என்ற பெயரில் அவர் மேயராக இருந்த காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் “பொங்கல் பண்டிகை – மாநில விருப்ப விடுமுறை” என்ற பழைய செய்தியை யாரோ புதிது போல சொல்லி இருக்கிறார்கள். அவரும் “என்னது சிவாஜி செத்துட்டாரா?” என்று பதட்டத்துடன் பாய்ந்துள்ளார். சொன்னவர்களுக்கு நிச்சயம் தெரியும் இது பழைய செய்தி என்று. ஆனால் திரு. ஸ்டாலின் அவரை கவர வேண்டும் என்று நினைத்தார்களோ அல்லது கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ. அள்ளி விட்டார்கள். திரு. ஸ்டாலின் அவர்களே இந்த பதிவை நீங்கள் படிக்க நேர்ந்தால் ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள். “உங்களுக்கு எதிரி தூரத்தில் இல்லை”.

திமுக மாறி மாறி ஒரு தசாப்தம் முழுவதும் மத்திய அரசில் அங்கம் வகித்த காலமெல்லாம் நடைமுறையில் இருந்த 14 கட்டாய தேசிய விடுமுறைகள் (சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்றவை) மற்றும் 12 மாநில விருப்ப விடுமுறை (பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்றவை) என்ற விதிகளை தான் இப்போது மக்கள் விரோதம் என்று கூறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் பேச்சுகள். தாங்கள் மத்திய அரசாக இருந்த காலத்து நடைமுறையையே புதிதாக எதிர்ப்பது என்ன வினோதமான போராட்டம்? பூட்டிய வீட்டுக்கு முன்பு உதார் விடும் ஆட்களை பார்த்திருக்கிறேன். இது என்ன? தன் வீட்டையே பூட்டிக்கொண்டு அதற்கு முன் சத்தம் போடும் சின்னப்பிள்ளைத்தனம்?

இந்த விடயத்தில் மரு.அன்புமணி அவர்கள் மட்டுமே பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த நடைமுறையை மாற்றி கட்டாய விடுமுறையில் சேர்த்து இது போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுபூர்வமாக எதார்த்தத்தை பேசி உள்ளார்.

ஏற்கனவே திரு.கலைஞர் அவர்களுக்கு மரியாதை செய்து ஆஸ்திரிய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டதாக ஒரு கட்டுக்கதை கட்டி ஒரு சின்னப்பையன் அவருக்கே அல்வா கொடுத்த போது எனக்கு சற்று சந்தேகம் வந்தது. கொள்ளை அடிப்பது என்பதை தவிர அறிவுசார் அரசியலுக்கு திமுகவில் இடம் உண்டா என்று.
அந்த வரிசையில் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்னமும் பரிதாபமாக தெரிகிறார்.

பாமக சார்பாக மரு.ஐயாவும், மரு.அன்புமணி அவர்களும் தெள்ளத்தெளிவான புள்ளிவிபரங்கள் நிறைந்த அறிக்கைகளை உடனுக்குடன் தருவதனால் பதட்டத்தில் இருந்த ஸ்டாலின் அவர்கள் அவசரப்பட்டு இப்படி ஒரு குளறுபடியை செய்து இப்போது கையறு நிலையில் சிக்கி தவிப்பது கொஞ்சம் வருத்தம் தான். “நமக்கு நாமே” என்ற வசனத்தின் முழு பொருள் புரியாமல் இருந்தேன். திமுக தலைவர்களுக்கு ஆப்பு வைப்பது திமுகவினரே தான் என்பதை சிந்திக்கும் போது “நமக்கு நாமே” எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று வியக்கிறேன்.

ஏற்கனவே துணை முதல்வராக தானே கையெழுத்திட்ட மீத்தேன் திட்டத்தை பின்னர் தானே எதிர்த்து பொங்கி எழுந்த போதே அதே சந்தேகம் ஸ்டாலின் அவர்கள் மீதும் வந்தது. இப்போது அது உறுதியாகிவிட்டது.

கடைசியாக தமிழ்நாட்டுக்கும் ஒரு ராகுல் காந்தி கிடைத்தே விட்டார்!

பி.கு: பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள விடுமுறைகள் பற்றிய மத்திய அரசின் ஆவணம் இணைப்பில்.

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media