தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் ஆர்வமாக வாங்கினாலும் ஒரு சிலர் வேண்டாம் என்று வாங்காமல் இருந்துள்ளனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் 4.4 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை என கூறப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர்களும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1723 குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4.40 lakh people across Tamil Nadu did not buy Pongal gift package


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->