தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை கடைகளுக்கும் லீவ்.!! ஏன் தெரியுமா?
All types of shops not functioning today
வணிகர் தினமான இன்று மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் கூட உள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள் மார்க்கெட்டுகள் ஹோட்டல்கள் என அனைத்து வகை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வணிகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வணிகர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை, சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி சட்டம் இயற்ற வலியுறுத்துவது குறித்து தீர்மானம் கொண்டுவர மாநாடு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
All types of shops not functioning today