5 ஆண்டுகள் விசாரணை நிறைவு.. முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த இறுதி அறிக்கை இன்று தாக்கல் - ஆறுமுகசாமி ஆணையம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று ஆறுமுக சாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிலிருந்தே யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. அவருக்கு அளிக்கப்ப சிகிச்சை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற தகைமைநீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

அவர்கள் முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.    இந்த விசாரணை குறித்தான இறுதி அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவகுழு அமைக்கப்படட்து. அந்த குழு சில நாட்களுக்கு முன் அவர்களின் மருத்துவ அறிக்கையை சமர்பித்தது. ஐந்தாண்டுகள் விசாரணைக்கு பின்,சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தனது முதல்வர் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arumugasamy Commission Submitted their inquiry report


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->