எச்ச சோத்துக்கு பிறந்தவன், ஓ.சி சோறு கேட்டு அட்டூழியம்.. ஹோட்டல் சூறை.! - Seithipunal
Seithipunal


உணவகத்திற்கு சாப்பிட சென்றவன், இஞ்சி கூடுதலாக போட்டு பிரைடு ரைஸ் கேட்டு தகராறு செய்து, சாப்பிட்டதற்கும் பில் கொடுக்காமல் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் பாண்டியன் என்ற உணவகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு சென்ற கெளுத்திப்பேட்டை செல்வம், உணவகத்தில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். 

இதன்பின்னர், பிரைடு ரைஸ் ஆர்டர் செய்த நிலையில், அதில் இஞ்சி அதிகமாக சேர்த்து தருமாறு கேட்டுள்ளார். இதனைக்கேட்ட பிரைடு ரைஸ் மாஸ்டர், பிரைடு ரைஸில் இஞ்சி அதிகமாக சேர்த்தால், சாப்பிட நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் பிரைடு ரைஸ் மாஸ்டரிடம் தகராறு செய்த நிலையில், சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்து சென்றுள்ளார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் வந்த செல்வம், காய்கறிகளை நறுக்கிக்கொண்டு இருந்த மாஸ்டர் அமீரை காலால் தங்கியுள்ளான். 

மேலும், அங்கிருந்த சேரையும் எடுத்து அடித்து நொறுக்கிய நிலையில், இதனால் அமீர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து, அமீரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை அறிந்த செல்வம் தரப்பு ரவுடிகள் வழக்கை வாபஸ் பெறக்கூறி தகராறு செய்த நிலையில், கடையின் உரிமையாளரிடம் எங்களை பகைத்துக்கொண்டு வேறொருவருக்கு கடையை வாடைக்கு விட்டுவிட்டு வருமானம் பார்த்திடுவாயா? என்று மிரட்டியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக குன்றத்தூர் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள சமயத்தில், ரவுடிகளை கைது செய்யாமல் இருப்பதால், ஓ.சி சோறு கேட்டு அரசியல் கட்சியினர் வருவதை போல, ரவுடிகளும் ஓ.சி சோறுக்கு அடிபோட்டு வருவதாகவும் உணவக உரிமையாளர்கள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரவுடியோ, ஆசாமியோ, அரசியல் வியாதியோ அவர்கள் கேட்கும் விதத்தில் உணவுகளை கொடுத்து, கோவில் உண்டியலில் போட்டுவிட்டது போல சென்றிருக்கலாம். சுவையாக இருக்காது என்று கூறி, இன்று உணவகத்தை மேலும் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் எதிர்மறையான நிதர்சனம். யாரும் எதிர்த்து பேசமாட்டார்கள், ஆயுதம் நான் வீசினால் தான் வீசும் என்று அறைபோதை மிதப்புடன் இருக்கும் ரவுடிகளை காவல் துறையினர் ஒடுக்க தவறினால், பழிவாங்கல் என்ற பெயரில் பொதுமக்கள் களமிறங்கும் சூழல் ஏற்பட்டால் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர் செயல்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kundrathur Hotel Attacked by Local Rowdies Gang Police Investigation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->