சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுமையாக நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைப்பதற்காகவும் சுமார் 7800 கிலோ மீட்டர் தொலைவிற்கு விரைவு சாலை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 

இந்தத் திட்டத்தில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் உட்பட மொத்தம் 23 திட்டங்கள் இருக்கின்றன. 3.3 லட்சம் கோடி மதிப்பில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த சாலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டமும் புதிய பாதையில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் துவக்கத்தில் இருந்தே விவசாயிகளாலும், சமூக ஆர்வலர்களாலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள வழியிலேயே சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய - மாநில அரசுகள் எட்டுவழிச்சாலையை அமைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்று, நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக பாமக வழக்கறிஞர் கே.பாலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Salem Expressway Case tomorrow in Supreme Court 8 December 2020


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->