#BREAKING : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  தொடர் மழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி காணப்படுகின்றன.  காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேபோல் ஈரோடு, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற அவர், தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவேரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து, கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு அவர்கள் தேவைகள் குறித்தும், செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister M.K.Stal's surprise inspection at the State Emergency Control Center


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->