கோவை வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலை நாடுகளில் மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் மக்கள் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைத்துக்கொண்டு வந்த கொரோனா பரவல், ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளை மக்கள் கடைபிடிக்க தவறியதால் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிவீரியம் எடுக்கலாம் என்ற அச்சத்தில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆந்திர பிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலத்தை தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் வழியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இன்று முதல் கேரளாவில் இருந்து வருபவராலுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Administration announce E Pass and Corona Negative Proof Wanted Coming Form Kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->