#JustIn: ராஜேஷ் தாஸுக்கு கிடுக்குபிடி.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எஸ் பெண் அதிகாரிக்கே இந்நிலை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப்பட்ட நிலை தொடரும்? என்று ராஜேஷ் தாஸின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவல்துறையில் உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு டி.ஜி.பி ராஜேஷ் தாஸின் மீதான புகார் தொடர்பாக விசாரணை செய்ய விசாக கமிட்டி அமைத்து உத்தரவு பிறப்பித்தது. கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நேற்று (28 பிப்ரவரி) இரவு இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் ராஜேஷ் தாஷின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், " ராஜேஷ் தாஸின் மீதான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்ய வேண்டும். 

மேலும், ஐ.பி.எஸ் பெண் அதிகாரிக்கே இந்நிலை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப்பட்ட நிலை தொடரும்?. ஏன் இந்த அலட்சியம். பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ யாரும் பயன்படுத்த கூடாது " என்றும் தெரிவித்துள்ளார். ராஜேஷ் தாஸ் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் அவர்களின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint Against DSP Rajesh Das about Sexual Torture Chennai High Court Raise Questions


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->