எந்தெந்த மாவட்டங்கள் ரிஸ்க்?.. மக்களின் நிலைமை என்ன?... தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

சென்னையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கொரோனா பரவலை தடுக்க மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். 

காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுங்கள். வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள், முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியில் வாக்களிக்க அனுமதி செய்யப்படுவார்கள். 

இதனை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பாளர்கள். தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதமானது தற்போது மேலும் அதிகரித்துள்ளது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பெரும் உதவி செய்யும். 

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போர் வீரர்களை போல் தற்போது மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus Spread increased Tamilnadu Says TN Health Ministry Secretary Radhakrishnan IAS 31 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->