விபத்தில் சிக்கிய நபரின் விலையுயர்ந்த உடைமைகளை மீட்டு, ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கடலூரில் சாலை விபத்தில் சிக்கிய நபரின் விலையுயர்ந்த உடைமைகளை பாதுகாப்பாக மீட்டு ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

என்னதான் அனைவரும் உழைத்தாலும் கூட உழைக்காமல் கிடைக்கின்ற பொருளுக்கு அலையாய் அலையும் மனிதர்களை தான் பெரும்பாலும் நாம் பார்ப்பது வழக்கம். இதனால்தான் கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கூட பிரபல தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தகைய நிலையில், கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஒரு நபர் காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்த நபரின் உயிரை காப்பாற்றினர். 

தொடர்ந்து அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும், அவர் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரம், கை சங்கிலி உள்ளிட்ட விலையுயர்ந்த உடைமைகளையும் செவிலியர் கல்பனா மற்றும் ஓட்டுனர் கனகராஜ் ஆகியோர் மீட்டு குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக கொடுத்தனர்.

அவசரகால ஆம்புலன்ஸில் பணிபுரியும் இந்த நபர்களின் நேர்மைக்கு தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore ambulance driver and Nurse save accident person and his expensive Accessories


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->