அரசு பேருந்து - மீன் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. ஓட்டுநர் உட்பட 3 பேர் பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட அரசுப்போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான குளிர்பதன வசதி கொண்ட சொகுசு பேருந்து சென்னை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தை திருக்கோவிலூர் திருபாலயந்தால் பகுதியை சார்ந்த சிவகுமார் (வயது 42) என்பவர் இயக்கியுள்ளார். 

இந்த பேருந்தில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், பேருந்து இன்று அதிகாலை சிதம்பரம் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது. இதன்போது, எதிர்திசையில் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி மீன்கள் ஏற்றிவந்த லாரி வந்துகொண்டு இருந்துள்ளது. இந்த லாரியை நெய்வேலியை சார்ந்த ஓட்டுநர் ஐயப்பன் இயக்கியுள்ளார். 

புகைப்படம்: அரசுப்பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் 

இந்நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்த நிலையில், பேருந்திற்குள் இருந்த பயணிகள் உயிருக்காக அலறித்துடித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார், பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்டினம் தரங்கம்பாடி பகுதியை சார்ந்த அன்பரசன் (வயது 37), நாகபட்டினத்தை சார்ந்த வைரவன் (வயது 20) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும், நாகபட்டினத்தை சார்ந்த பிரவீன், ஜெகதீசன் (வயது 25), சென்னை துரைப்பாக்கத்தை சார்ந்த விக்டர் (வயது 38), காரைக்கால் பகுதியை சார்ந்த அகமது உசேன் (வயது 38), சென்னையை சார்ந்த ரவி (வயது 54), லீலா, திருவாரூர் பகுதியை சார்ந்த சவுந்தர ராஜன் (வயது 45), சரவணன், லாரி ஓட்டுநர் ஐயப்பன் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் காவல் துறையினர் மற்றும் சிதம்பரம் டி.எஸ்.பி லாமொக், புதுச்சத்திரம் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும், படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Chidambaram Govt Ac Bus Velankanni to Chennai Accident Including Bus Driver 3 Persons Died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->