பொதுமக்களுக்கு குட் நியூஸ்! திண்டுக்கல் ரெயில் நிலையம் டூ கொடைக்கானல்.! இன்று முதல்...  - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு மக்கள் கோடை விடுமுறையை முன்னிட்டு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

சிலர் வெளியூர்களில் இருந்தும் திண்டுக்கல்லுக்கு ரயிலில் வந்து பேருந்துகளில் கொடைக்கானலுக்கு சென்று இருக்கின்றனர். இதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் பயணிகள் பெறும் சிரமம் அடைகின்றனர். 

இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இன்று முதல் அரசு பேருந்து கொடைக்கானலுக்கு ஏற்றப்படுகிறது. அதன்படி காலை ௪.00 மணி, 5.15 மணி, 6.45 மணி, 7.30 மணி ஆகிய நேரங்களில் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்து இயக்கப்பட உள்ளது. 

இதற்கு கட்டணமாக ரயில் நிலையத்திலிருந்து ரூ. 95, பேருந்து நிலையத்திலிருந்து ரூ. 85 வசூலிக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொது மேலாளர், சுற்றுலா பயணிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு கொடைக்கானல் சுற்றி பார்த்து மகிழலாம் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Railway Station to Kodaikanal govt buses run


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->