ஆ.ராசாவுக்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்.. கொஞ்ச நஞ்சா பேச்சா?..! - Seithipunal
Seithipunal


ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் 48 மணிநேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். 

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வரும் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசினார். இந்த பேச்சு தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி செயல்பட்டதால் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் 48 மணிநேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரும் நீக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இனி வரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆபாசமாகவோ அல்லது தரக்குறைவாகவோ, பெண்களின் கண்ணியத்தை குறையும் வகையில் உள்ள பேச்சுக்களை பேச கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK A Raja Election Campaign Banned by Election Commission due to Abuse Speech about TN CM Mother


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->