ஆ.ராசா கீழ்த்தரமாக பேசிய விவகாரம்... தேர்தல் ஆணையரிடம் விளக்கம்.! செய்தியாளர்களுக்கு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஆ.ராசா பேசியுள்ளதை திரித்ததற்கான ஆதாரங்களை நாங்கள் நேற்றே வழங்கியுள்ளோம் என ஆ.ராஜாவின் வழக்கறிஞர் பேட்டியளித்தார்.

தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய விஷயமாக கடந்த சில நாட்களாக இருப்பது திமுகவின் ஆ.ராசா தமிழக முதல்வரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியது இருந்து வருகிறது. நல்ல உறவு, கள்ளஉறவு, நிறைபிரசவம், குறைப்பிரசவம் என சர்ச்சையில் நேரடியாக சிக்கிக்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு நூதனமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரை விமர்சித்து பேசியிருந்தார். 

இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் உள்ள பல நியாயஸ்தர்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், திமுக தரப்பில் எந்த விதமான கண்டனமும் தெரிவிக்காத நிலையில், ஆ.ராஜா பேசியது வெட்டி திரித்து பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டது என முட்டுக்கொடுக்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகிய நிலையில், இவர்கள் இப்படி பேசுவது முதலும் இல்லை, கடைசியும் இல்லை என்று கொந்தளித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆ.ராசாவின் வழக்கறிஞர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்த விஷயம் தொடர்பாக விளக்கம் அளித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஆ.ராஜா பேசியுள்ளதை திரித்ததற்கான ஆதாரங்களை நாங்கள் நேற்றே வழங்கியுள்ளோம். இது குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளோம். அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாங்கள் கேட்ட அவகாசத்தை கேட்டுளோம். அதனை வழங்குவார்கள் என்று நினைக்கிறோம் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK A Raja Lawyer Pressmeet 31 March 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->