" நாம் விரும்பும் சென்னை " - எப்போது? எப்படி சாத்தியம்?...! மருத்துவர் இராமதாஸ் பதில்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2008 ஆம் வருடத்திலேயே சென்னையின் வளர்ச்சிக்கு " நாம் விரும்பும் சென்னை " என்ற பெயரில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னெடுத்த திட்டங்களை நினைவுகூர்ந்த மருத்துவர் இராமதாஸ், வளர்ச்சிக்கான திட்டங்களை தெரிவித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சென்னை சேப்பாக்கம் - திருவெல்லிக்கேணி தொகுதியின் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " பாமக ஆட்சி செய்திருந்தால் வெளிநாடுகள் சென்னையை கண்டு வியக்கும் அளவு மாற்றியிருப்போம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாம் விரும்பும் சென்னை என்ற தலைப்பில் வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து பல விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை பெருநகரத்தின் வளர்ச்சிக்காகவும், மாற்றத்திற்காகவும், தூய்மையாகவும் நாம் விரும்பும் சென்னை திட்டம் என்று ஆவணமே தயார் செய்யப்பட்டு பாமக சார்பாக மருத்துவர் அன்புமணியால் வெளியிடப்பட்டது. 

சென்னை பெருநகர மாற்று போக்குவரத்து திட்டம் கடந்த 2008 ஆம் வருடமாக பாமகவால் வெளியிடப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெரும்பாலும் மிதிவண்டியில் செல்கிறார்கள். மிதிவண்டிக்கென தனியொரு பாதை இருக்கிறது. இங்கு அப்படி எதுவுமே கிடையாது. பொதுப்போக்குவரத்து மற்றும் மிதிவண்டியை மக்கள் உபயோகம் செய்ய தொடங்கினால் காற்று மாசு இருக்காது. தற்போது இருசக்கர வாகன பயன்பாடு, கார் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமையும். அன்று அழகான சென்னையை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். வளர்ச்சி என்பது எங்கேயோ இருப்பதல்ல. நாம் திட்டமிட்டு, செயல்படுத்தி, மக்கள் பயனடையும் வகையில் உபயோகம் செய்ய வைத்தால் அதுவே வளர்ச்சி. 

சென்னையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு இருந்தது. கூவம் மக்களுக்கான ஆறாக இருக்கையில், வீடுகளுக்கே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று கூவம் கால்வாயால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்று அன்றைய மூத்ததேயர்கள் நமக்கு வழிகாட்டினார்கள். சென்னையில் உள்ள பிரச்சனைகளை சவாலாக ஏற்று, அதனை சரி செய்வதற்கும் பாமக அறிவிப்பு வெளியிட்டது. வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பது பாமக மட்டுமே. 

இரண்டரை வயது குழந்தை படிக்க ஒன்றரை இலட்சம் கட்டணம் செலுத்தும் சூழல் வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசே கல்வி செலவை ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும். பல நாடுகள் முன்னேறியதற்கு காரணம் கல்வி மட்டுமே. தென்கொரிய நாட்டில் குழந்தைக்கு 5 வயது ஆனதும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரி வீட்டில் வந்து எந்த பள்ளியில் உங்களின் குழந்தையை சேர்க்க வேண்டும் என்று படிவம் கொடுப்பார்கள். அங்கு அவர்கள் குழந்தையை கவனித்துக்கொள்வார்கள். 

கடந்த 1967 கோத்தாரி கமிஷனில் ஒரு குழந்தை வசிக்கும் இல்லத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் படிக்க வேண்டும் என்று கூறுகிறது. அம்பானியின் பேரனுக்கும், மகனுக்கும் கிடைக்கும் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பல கமிஷன் கூறுகிறது. கல்வி வளர்ச்சிக்கு 6 விழுக்காடு அரசு திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணம் செலவழிக்க வேண்டும் என்று ஒரு கமிஷன் கூறுகிறது. இன்று வரை எதுவும் நடக்கவில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கூட்டணி. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார்கள். அவரின் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. நீங்கள் பண்புள்ள வேட்பாளர் கஸ்ஸாலியை வெற்றியடைய செய்ய வேண்டும். மாற்றத்தை வழங்கி பாருங்கள். அவர் செய்வதை வைத்து நீங்களே வியந்துபோவீர்கள். நமது சின்னம் மாம்பழம். மாம்பழ சீசன் இது. ஏ.வி.ஏ கஸ்ஸாலியை அமோக வெற்றியடைய செய்யுங்கள். 

உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் குரங்கு - முட்டாள் முதலை கதையை நினைத்துக்கொள்ளுங்கள். யார் குரங்கு? யார் முதலை? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன் நான். வெற்றிவிழாவிற்கு நான் வருகிறேன். உங்களை சந்திக்கிறேன் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Memorize about 2008 Dr Anbumani Announce Scheme about Our Loving Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->