1986 வன்னியர் சங்க போராட்டம்.. கும்மிடிப்பூண்டி மக்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடுகளை போல சென்னையையும், தமிழகத்தையும் மாற்ற பாமக முயற்சி செய்கிறது என்று கூறி மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கும்மிடிப்பூண்டி தொகுதி தண்டலத்தில் பாமக வேட்பாளர் எம்.பிரகாஷை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " எம்.பிரகாஷை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. விவசாயி தமிழக முதல்வராக ஆட்சி செய்துள்ளார். 

அவர் மீண்டும் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் பல பணிகளை செய்து வந்தாலும், அடிப்படையில் விவசாயிகள். நல்ல கூட்டணியில், நல்ல வேட்பாளரை உங்களுக்கு தந்துள்ளோம். அவரை மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். சென்னையை ஐரோப்பியா நாடுகளுக்கு இணையாக மாற்ற பல்வேறு திட்டங்கள் நம்மிடம் உள்ளது. 

நார்வே நாட்டிற்கு நான் சென்றுள்ளேன். பூமியின் வடதுருவத்தில் இருக்கும் நார்வே நாட்டிற்கு நான் சென்றுள்ளேன். அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அதனைப்போன்ற மகிழ்ச்சியை தமிழக மக்கள் பெற வேண்டும். பல ஆலோசனைகளை பெற்று தமிழக முதல்வர் பணியாற்றி வருகிறார். அவரிடம் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தையும் மாற்றுவோம். சமூக நீதியில் கும்மிடிப்பூண்டி தொகுதி செய்த தியாகங்கள் மறக்க இயலாதது. 

1986 வன்னியர் சங்க இரயில் நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட வன்னியர் சங்க பொறுப்பாளர் வேலு, சாஸ்திரி அம்மாள் என்று பலரையும் கூறிக்கொண்டே செல்லலாம். 5 மணிநேரம் சென்னை சென்ட்ரலுக்கு இரயில்கள் செல்ல விடவில்லை. என்னை சிறைவைத்தார்கள். அன்றைய காலத்திலேயே 5 மணிநேரம் இரயில் மறிப்பு செய்தது கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் தான். அதிமுக தலைமையிலான கூட்டணி பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. 

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதி அமோக வெற்றியடையும் என்பது உறுதியாகியுள்ளது. மக்கள் உங்களுக்கான நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள். பெண்களிடம் ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என்ற மூன்று சக்திகள் உள்ளது. 

நீங்கள் முடிவு செய்து உங்களுக்கான வேட்பாளராக பிரகாஷை தேர்வு செய்யுங்கள். விவசாயி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். பிரகாஷுக்கு அமோக வாக்களித்து, அவரை வெற்றிபெற செய்யுங்கள். முக்கனியில் முதல் கனியாக இருக்கும் மாம்பழம். மாம்பழ சின்னத்தில் வாக்களியுங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Speech at Gummidipoondi Constituency Election Campaign TN Election 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->