எதிர்கட்சிக்கு சட்டையை கிழித்து பனியன் விளம்பரம் காட்ட தெரியும் - மருத்துவர் இராமதாஸ் கலாய்.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள எதிர்கட்சிக்கு ஒன்றும் தெரியாது. சட்டையை கிழித்து சாலையில் உட்காரத்தான் தெரியும் என்று மருத்துவர் இராமதாஸ் கலாய்த்துள்ளார்.

நெய்வேலி தொகுதி முத்தாண்டிக்குப்பம் பகுதியில் மருத்துவர் இராமதாஸ் பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " திமுக என்றாலே மக்களுக்கு திகில் தான். திமுகவின் ஆட்சிக்காலம் இருண்டகாலமாக இருந்தது. 

கடந்த 4 வருடமாக நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அது மீண்டும் தொடர வேண்டும். எதிர்க்கட்சி என்றால் ஆக்கபூர்வமாக கூற வேண்டும். புதிய வழிமுறைகளை கூற வேண்டும். தற்போதுள்ள எதிர்கட்சிக்கு ஒன்றும் தெரியாது. சட்டையை கிழித்து சாலையில் உட்கார்ந்து பனியன் விளம்பரத்தில் நடிக்க தெரியும். 

என்றாவது ஒருநாள் இந்த திட்டத்தை இப்படி செயல்படுத்த வேண்டும், இதனை இப்படி செய்யலாம் என ஆலோசனை கூறியிருப்பாரா?. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அவர்களின் அராஜகம் அதிகரித்துவிடும். கடந்த காலங்களில் இருந்த மின்வெட்டு பிரச்சனை ஏற்படும் " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Toll MK Stalin at Cuddalore Neyveli Election Campaign 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->