தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு - மகிழ்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான மசோதா மற்றும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் உறுதி அளித்தார். இது தேவேந்திர குல வேளாளர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த 1989 ஆம் வருடத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், "வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள்" என்ற மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினர். இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மருத்துவர் இராமதாஸ் ட்விட் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் இராமதாஸின் ட்விட்டர் பதிவில், " பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன " என்று பதிவு செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss tweet about PM Modi Statement of Devendra Kula Vellalar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->