டாஸ்மாக் விவகாரத்தை வைத்து, தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


தனிநபர் இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் சத்துணவு முட்டை வழங்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில், டாஸ்மாக்கை ஏன் தமிழக அரசு மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நிலையில், அம்மா உணவகம் மூலமாக மக்கள் உணவருந்தி வந்தனர். 

பள்ளி, மாணவ - மாணவியர்களின் நலனிற்க்காக சத்துணவு மையம் மூலமாக இப்போதைய சூழ்நிலையில் முட்டை வழங்க வேண்டும் என்று சுதா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், வைட்டமின் சி மற்றும் ஜின்க் மாத்திரைகளை வழங்க கூறியும் மனுதாரர் கூறியிருந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் " சமூக இடைவெளி பிரச்சனை காரணத்தால் முட்டை வழங்கப்பட இயலாது " என்று தெரிவித்தார். 

இதனைக்கேட்ட நீதிபதிகள் " டாஸ்மாக்கை ஏன் தமிழக அரசு மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது " என்று கேள்வி எழுப்பினர். மேலும், முட்டை வழங்குவது மற்றும் சமூக இடைவெளி பிரச்சனையை அரசு தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து ஒருநாள் அவகாசம் அரசு தரப்பில் கேட்கபட்டு, அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court Raise question to TN Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->