மதுரை, விருதுநகரில் கொள்ளை.. பெரம்பலூரில் பிடிபட்ட ஈரான் தம்பதி.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி உள்ளிட்ட தபால் நிலையங்களில் ஈரான் பணத்தை மாற்ற சொல்லி ஒரு தம்பதி கொள்ளை அடித்ததாக காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

இதையடுத்து அவர்கள் வேறு ஏதாவது தபால் நிலையங்களில் தங்களது கைவரிசையை காட்டலாம் என்று நினைத்த போலீசார் அனைத்து தபால் நிலையங்களுக்கும் இது குறித்து அலர்ட் கொடுத்துள்ளனர். அது போல அந்த தம்பதிகள் மீண்டும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தபால் நிலையத்தில் தங்களது வேலையை காட்டியுள்ளனர். 

ஏற்கனவே, அலர்ட் வந்ததால் உஷாரான தபால் நிலைய ஊழியர்கள் அவர்களை பிடித்து வைக்க முயற்சித்த போது அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். பின், குன்னம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வந்து அந்த தம்பதிகளை பிடித்தனர்.

இதையடுத்து விசாரித்ததில் முதன் முதலில் தபால் நிலைய அலுவலகத்தில் ஈரான் பணத்தை மாற்றமுயன்ற அந்த ஈரான் தம்பதி  குடாரி மஹ்தி- அஹ்மதி மைனோ என்பவர்கள் தபால் நிலையத்தில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதை தெரிந்து கொண்டனர். அங்கு சிசிடிவி வசதிகளும் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் இதுபோல திருட அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran couples Caught By Police In Perambalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->