கள்ளக்குறிச்சி அருகே உயிர்போகும் அபாயத்தில், பேருந்தின் மேற்கூரையில், பயணிக்கும் மாணவர்கள்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே படியில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டு பள்ளி மாணவர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கியவாறு, படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். 

இதற்கு காரணம் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் அதிகப்படியான பேருந்துகளை அரசு இயக்காமல் இருப்பது என்று கூறலாம். அதே சமயம் சில இளைஞர்கள் படியில் தொங்கி சாகசம் செய்து பயணிப்பதை கெத்தாக நினைக்கும் பழக்கமும் இருக்கிறது. 

இத்தகைய நிலையில், கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கைகாட்டி அருகே சேலம் மெயின் சாலையில் தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் பயணிக்கின்றனர். அப்பொழுது, அவர்கள் படிகளில் தொங்கிய படியும், அந்த பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து கொண்டும் மிக ஆபத்தான முறையிலும் பயணிக்கின்றனர். 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதை கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும், "பள்ளி கல்லூரி நிர்வாகங்களும், காவல்துறையும் இணைந்து இந்த போன்ற செயல்களை எப்படி கட்டுப்படுத்தலாம்." என்பதை ஆலோசித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi students travelling on bus in very dangerous situation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->