உடல்நிலை சரியில்லாததால் வேட்பாளர் மாற்றம் - தேமுதிக தலைவர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொருளாளர் மற்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திரு.A.ரவி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.கஸ்தூரி.N.தங்கராஜ்,B.A., (மாவட்ட கழக பொருளாளர்) அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur DMDK Candidate Changed Announced by DMDK President Vijayakanth TN Election 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->