மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்த்து களம்காணும் அமமுக, விசிக?.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை, கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மதுரையில் தொடங்கினர். இக்கட்சியின் நான்காம் வருட துவக்க விழா நாளை (21/02/2021) அன்று நடைபெறவுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு வரும் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான்காம் வருட துவக்க விழாவை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் எஞ்சினியரிங் கல்லூரியில் இருக்கும் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனால் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

நாளைய கூட்டம் நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது. இதனால் நாளைய தினத்தை எதிர்நோக்கி அரசியல் விமர்சகர்கள் காத்துகொண்டு உள்ளனர்.

இந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியை உறுதி செய்யப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Makkal Needhi Maiam Alliance details May be Release Tomorrow 21 Feb 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->