#Breaking: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பா.? பொதுமக்கள் திறக்கச்சொல்லி மனு.!  - Seithipunal
Seithipunal


கிராம பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், சர்வதேச உரிமைகள் கழகத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். 

வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். 

அந்த மனுவில் தவறான தகவல்களை பரப்பி ஆலை மூடப்பட்டு இருப்பதாகவும், 18 ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். 

மீண்டும் சூடுபிடிக்கும் ஸ்டெர்லைட் வழக்கு.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட  அறிவிப்பு.!! - Seithipunal

இதற்கு இடையில் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என சர்வதேச உரிமைகள் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதில், "போலியான ஆதரவாளர்களை உருவாக்கி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

தூத்துக்குடி மக்களுக்கு இடையில் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி சிலர் வன்முறை செய்ய முயற்சிக்கின்றனர்." என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Sterlite factory opens again in Tuticorin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->