#Breaking: திமுக கூட்டணியில் மதிமுக களம்காணவுள்ள தொகுதிகள்.. அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் உள்ள மதிமுக மதுராந்தகம், வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர் போட்டியிடவுள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் 25 தொகுதிகள், மாா்க்சிஸ்ட் 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், விசிக 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், கொமதேக 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 தொகுதி, ஆதி தமிழா் பேரவை 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சி 1 தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஆகியுள்ளது. 

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை? என்பது குறித்து இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போதுவரை நடந்துவருகிறது. இதில், அந்த கட்சிகள் சார்பாக தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், மதிமுக தேர்தல் குழு திமுக தேர்தல் குழுவுடன் தொகுதிகளின் விபரம் தொடர்பான ஆலோசனை மேற்கொண்டது. ஏற்கனவே மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி பட்டியல் பேச்சுவார்த்தை முடிவில் மதுராந்தகம், வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK and DMK Alliance Consultancy Official Announcement 10 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->